ஒரு நடிகரை தெரியாது என்று சொன்னது தவறா? நடிகைய கதறவிட்ட ரசிகர்கள்!

ஒரு நடிகரை தெரியாது என்று சொன்னது தவறா? நடிகைய கதறவிட்ட ரசிகர்கள்!

Loading...

நடிகை மீரா சோப்ராவை ஆபாசமாகப் பேசிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா மந்திரி தெரிவித்துள்ளார்.

நடிகை நிலா தமிழில் அன்பே ஆருயிரே மற்றும் ஜாம்பவான் ஆகிய படங்களில் நடித்தவர். நிலா என்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவரின் உண்மையானப் பெயர் மீரா சோப்ரா. இவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். கொரோனா லாக்டவுனை முன்னிட்டு சில  தினங்களுக்கு தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜூனியர் என் டி ஆர் பற்றி கேட்ட கேள்விக்கு ‘அவரை எனக்கு தெரியாது… நான் அவர் ரசிகை அல்ல’ எனக் கூறினார். மேலும் தான் மகேஷ் பாபுவின் ரசிகை எனக் கூறினார்.

Loading...

இதுபோதாதா ஜுனியர் என் டி ஆர் ரசிகர்களுக்கு… அவரது கணக்கை டேக் செய்து ஆபாசமாக அர்ச்சனை செய்து வந்தனர். மேலும் ஒரு சிலர் உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும், பாலியல் வல்லுறவு செய்துவிடுவேன் என்றும் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் கடுப்பான மீரா சோப்ரா வசைமொழிகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய கணக்கில் பகிர்ந்து தெலங்கானா போலீஸையும், தொழில்துறை அமைச்சர் கே டி ராமாராவையும் டேக் செய்து இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார்.

இதையடுத்து நிலாவுக்கு பதிலளித்த அமைச்சர் கே டி ராமாராவ் ‘இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி தெலங்கானா போலீஸாருக்கு வலியுறுத்தியுள்ளேன்’ என உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில்தான் இதுபோல நடிகைகள் மற்றும் பிரபலங்களை இதுபோல ரசிகர்கள் ஆபாசமாகப் பேசுவது வழக்கம்… இம்முறை தெலங்கானா ரசிகர்கள் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைக் காட்டியுள்ளனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*