வேணாம் சார் விட்டுருங்க அருணனிடம் கெஞ்சிய நடிகை கஸ்தூரி ! வெட்கம்கெட்ட செயல் கண்டிக்கும் மக்கள் !

வேணாம் சார் விட்டுருங்க அருணனிடம் கெஞ்சிய நடிகை கஸ்தூரி ! வெட்கம்கெட்ட செயல் கண்டிக்கும் மக்கள் !

சென்னை.,

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டான் அவனது உடலுக்கு பல்வேறு மக்களும் மதத்தை கடந்து சாதியை கடந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இனியும் மற்றொரு சுஜித்திற்கு இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது எனவும், அதற்கு அரசு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும்., ,

அரசும் ஆழ்துளை கிணறு சம்பந்தமான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் தனி மனிதர்களும் இதற்கு பொறுப்பேற்று தங்கள் கிணறுகளை முறையான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் வலியுறித்தி வருகின்றனர்.

Loading...

இதில் முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்தியர்கள் தீபாவளி பண்டிகைகூட முழு மனதில் கொண்டாட முடியாமல் கோவிலில் சென்று சுர்ஜித்திற்கும் சென்று வேண்டினார்கள், பல பேர் சுஜித்தை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.

Loading...

ஆனால் இதிலும் ஒரு கும்பல் பிண அரசியலில் ஈடுபடுவதாக குற்ற சாட்டு எழுந்தது, குழந்தை கிறிஸ்த்தவன் என்பதால் இவர்கள் முயற்சி எடுக்கவில்லை, இதுவே இந்துக்கள் என்றால் விட்டிருப்பார்களா? என்ற கேள்வியையும் எழுப்பினர். அதேபோல் ஒரு பொறுப்பான பேராசிரியர் இடத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணனும், “சுர்ஜித் கிறிஸ்தவர் குழந்தை என்பதால் சங்கிகள்
காட்டிய வன்மத்தை கண்டாயா தமிழா?
மதவெறியர்கள் மனித மிருகங்கள்” என்று பதிவிட்டார்”.

இதற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து அருணனுக்கு செருப்படி கொடுக்காத விதமாக விளக்கினர். இதற்கு நடிகையும் அரசியல் குறித்து தனது கருத்துக்களை பொது வெளியில் சொல்லும் நடிகை கஸ்தூரி நேரடியாக அருணன் ட்விட்டர் பதிவிற்கு கீழே வந்து “வேணாம் ஸார். விட்ருங்க. ஒரு குழந்தையின் பிணத்துல கூடவா உங்க அரசியலை செய்வீங்க? தப்புங்க ஐயா.!” என்று பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குழந்தையை பறிகொடுத்துவிட்டோம் என்று பெற்றோர்கள் துயரத்தில் இருக்க ! குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லையே என்று மீட்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் கண்கலங்கி நிற்க சிலர் இதுபோன்று மூன்றாம் தர அரசியலில் ஈடுபடுவது பலரிடம் கண்டனத்தை பெற்று வருகிறது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *