கொரோனா சிகிச்சை: குணமாகி வீட்டுக்கு சென்ற கனிகா கபூர் – இனிமேலாவது ஒழுங்காக இருப்பாரா?

கொரோனா சிகிச்சை: குணமாகி வீட்டுக்கு சென்ற கனிகா கபூர் – இனிமேலாவது ஒழுங்காக இருப்பாரா?

Loading...

கொரோனா தொற்றோடு பார்ட்டிகளுக்கு சென்ற பாடகி கனிகா கபூர் சிகிச்சையில் முழுதும் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மாட்ர்ச் 15 ஆம் தேதி முன் லண்டன் சென்றுவிட்டு லக்னோ திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லப்பட்ட அவர் லக்னோவில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் ஆகியோர் உள்பட கலந்துகொண்டனர்.

Loading...

இதையடுத்து கனிகா கபூர் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பற்றி குறைக் கூறி அங்கு பிரச்சனைகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனைகளில் இருக்கும் அவருக்கு கொரொனா நோயாளிகளுக்கு செய்யப்படும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படுவது போல கொரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தொடர்ந்து 5 ஆவது முறை அவருக்கு சோதனை நடத்தப்பட்டதாகவும் ஐந்து முறையும் கொரோனா பாஸிட்டிவ் என்று அவரது சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது உடல் சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தொடர் சிகிச்சைக்குப் பின் இப்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். கடைசி இரண்டு முறை அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளனர். வீடு திரும்பியுள்ள அவர் இனிமேலாவது ஒழுங்காக இருப்பாரா என்று சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*