வரிசைக்கட்டும் ஆபாச வீடியோக்கள்… ஃபேக் ஐடிகளால் டயர்டான நடிகை!

வரிசைக்கட்டும் ஆபாச வீடியோக்கள்… ஃபேக் ஐடிகளால் டயர்டான நடிகை!

Loading...

பிரபல மலையாள நடிகையான அனுமோலின் சமூகவலதளத்துக்கு தொடர்ந்து ஆபாசப்படத்தை அனுப்புவர்களைப் பற்றி கோபமாக பேசியுள்ளார்.

பொது வாழ்வில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் சொல்லில் வடிக்க முடியாதவை. ரசிகர்கள் என்ற பெயர்களில் அத்துமீறி கேள்விகள் கேட்பதும், ஆபாசமாக பேசுவதும், ஆபாச வீடியோக்களை அனுப்புவதும் என பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலைதான் இன்றுவரை. அதையும் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு ஃபேக் ஐடியில் இருந்தே செய்வார்கள்.

Loading...

இந்த பிரச்சனையை இப்போது சந்தித்து இருப்பவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுமோல். இவர் சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். இந்நிலையில் இப்போது சிலர் தனக்கு ஆபாசப் படங்களை அனுப்புவதுக் குறித்து புலம்பித்தள்ளியுள்ளார்.

அதில் ‘அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்படி அனுப்புவர்களை பிளாக் செய்து டயர்ட் ஆகிவிட்டேன். ஏதோ கடவுளின் பரிசு போல தன்னுடைய ஆபாச வீடியோக்களை தொடர்ந்து ஒருவர் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.அயோக்கியர்களே இது அருவருப்பை மட்டுமே தரும். அடுத்த முறை நான் சைபர் கிரைம் போலிஸிடம்தான் புகார் கொடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதுபோல முன்னரும் பல நடிகைகள் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*