நிம்மதியாக வாழ டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்; பிரபல நடிகை

நிம்மதியாக வாழ டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்; பிரபல நடிகை

நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன். அதனால் டுவிட்டர் தளத்திலிருந்து விலகுகிறேன் என பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ‘எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். டுவிட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். டுவிட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை” என்று கூறியுள்ளார்.

Loading...

டுவிட்டரில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கும் நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் பாஜக கட்சி மற்றும் ஆட்சியின் தவறுகளையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டி டுவிட்டர் பயனாளிகளின் பெரும் ஆதரவை பெற்று வந்தார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள் குறித்த செய்திகள், டிரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் குஷ்புவே வெளியிட்டார்.

Loading...

கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை முஸ்லீம் என ஒருசிலர் சுட்டிக்காட்டியபோது, ‘ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத்கான்’ என்று வெளிப்படையாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் தைரியமாக அறிவித்தார்.

அதேபோல் சமீபத்தில் தனது இரண்டாவது மகளை ஒரு டுவிட்டர் பயனாளி ஆபாசமாக விமர்சனம் செய்தபோது அந்த நபரை கடுமையான வார்த்தைகளால் திட்டி டென்ஷனும் ஆனார். இந்த நிலையில் அவர் திடீரென டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *