நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் உய்ரநீதிமன்றம் உத்தரவு !

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் உய்ரநீதிமன்றம் உத்தரவு !

Loading...

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வரும் 15-ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்பதால், அவசரகதியில் நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என துணைநடிகர் பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல், நடிகர் சங்க உறுப்பினரான ஏழுமலை என்பவரும், தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்திருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வரும் 15-ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*