குவியும் கொரோனா நிவாரண நிதி ! அமைதிகாக்கும் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோபத்தில் மக்கள்

சீனா வில் உருவான கொரோனா இன்று உலக நாடுகளையே உலுக்கி வருகிறது . இந்த வைரஸின் தீவிரத்தை உணர்த்த இந்திய அரசு 21 நாட்கள் இந்தியா முழுவதும் முழு உறடக்கை அறிவித்துள்ளது . கொரோனாவால் இந்தியா கடும் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் .

Loading...

இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மீள தொழிலதிபர்களும் , நடிகர்களும் நிதியை வாரி வழங்கிவருகின்றனர் . இந்த பட்டியலில் முதல் நபராக 1500 கோடி நிதியை வாரி வழங்கி இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது TATA நிறுவனம் . அதேபோல வேதாந்தா குழுமம் 100 கோடி அறிவித்துள்ளது .

இந்தியாவின் முதல் பணக்காரரான அம்பானி கொரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனை கட்டுவதுடன் . தனது ஊழியர்களுக்கு இருமடங்கு சம்பளம் உள்ளிட்ட பல நல திட்டங்களை அறிவித்துள்ளார் . அதேபோல சினிமா நடிகர்களுக்கும் தங்கள் பங்கிற்கு நிதிஉதவி அளித்து வருகின்றனர் .

Loading...

அதிலும் குறிப்பாக அக்சய் குமார் 25 கோடி நிதி அறிவித்துள்ளார் . பவன் கல்யாண் 2 கோடி , பிரபாஸ் 4 கோடி , மகேஷ் பாபு 1 கோடி , சிரஞ்சீவி 1 கோடி , இதுபோல பல முன்னணி நடிகர்களும் தங்கள் பங்கிற்கு நிதிகளை வழங்கிவரும் நிலையில் . தமிழக நடிகர்கள் இதுவரை பெரிதாக எதுவும் செய்யவில்லை திரைப்பட தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் 50 லட்சமும் , தனுஷ் 15 லட்சமும் மேலும் சில நடிகர்கள் 1 முதல் 5 லட்சமும் திரைப்பட தொழிலாரர்களுக்காக கொடுத்துள்ள நிலையில் .

அவர்கள் உயர காரணமாக இருந்த மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை . இது பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உருவாக்கியுள்ள சூழலில் . தமிழகத்தின் முதல் பணக்காரரான சன் குளும்மத்தின் தயாநிதி மாறனும் இதுவரை எதுவும் செய்யவில்லை . தமிழக மக்களால் உயர்ந்த இவர்கள் மக்களுக்கு இதுபோன்ற சூழலில் உதவவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*