யாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் ! விஜய்க்கு இரட்டை பிகில் அடிக்கும் பாஜகவினர் !

யாரை எங்கு உட்காரவைக்கவேண்டும் என்பது மோடிக்கு தெரியும் ! விஜய்க்கு இரட்டை பிகில் அடிக்கும் பாஜகவினர்

Loading...

சமூகவலைத்தளம்.,

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று சென்னையில் நடைபெற்றது, இதில் விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உற்சாகமடைந்தனர், விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் பேசினார் ஆனால் மழுப்பலாக பேசினார் என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Loading...

நடிகர் விஜய் இசைவெளியீட்டு விழாவில் பேசியது

அரசியலில் புகுந்து விளையாடுங்கள்,  ஆனால், விளையாட்டில் அரசியல் செய்யாதீர்கள் என கோரிக்கை விடுத்தார்.

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்றார்.  

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், யார் மீது பழி போட வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

எனது படங்களை உடையுங்கள்,  கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான் பேனர்களை கிழிக்காதீர்கள் அதற்காக ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் நடிகர் விஜய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 

கருணாநிதியை இழிவு படுத்திய அமைச்சர் ஒருவரை  பிரசாரத்திற்கு மத்தியில் நடுரோட்டில் இறக்கிவிட்டு எம்.ஜி.ஆர், அறிவுரை வழங்கியதாக குட்டி கதை ஒன்றை கூறிய விஜய், அதே போல எதிராளியை மதிக்க வேண்டும் என்று கூறி இசை வெளியீட்டு விழாவில் தனது உரையை முடித்தார்.

இதில் பலரும் விமர்சனம் செய்வது என்னவென்றால் பேனர் கட்அவுட் கலாச்சாரத்தையே முழுவதும் ஒழிக்க வேண்டும் என்று விஜய் பேசினால் வரவேற்கலாம், அவரோ பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன கையோடு, தன்னுடைய ரசிகர்கள் மீது கைவைக்காதீர்கள் பேனரை கிழித்தால் வருத்தமடைவார்கள் என்று சொல்வது மீண்டும் பேனர் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதுதானே பொருள் என்று விமர்சனம் செய்கின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் விஜய் சொல்லிய யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைக்க வேண்டும் என்ற பஞ்ச் டயலாக்கை வைத்து விஜய் மோடி ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈ பி எஸ் உள்ளிட்ட பலரை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து இதுதான் அந்த இடமா என்றும் அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்,

மேலும் மோடிக்கு தெரியும் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்று மோடியை விஜய் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*