Connect with us

#24 Exclusive

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு ! பிடிமானம் இருப்பது உறுதியானது ! ரசிகர்கள் அதிர்ச்சி

AGS நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகிய நிறுவனங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பிகில் படத்தில் நடித்திருந்த விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விசாரணை நடத்தியதுடன் அவரை அவரது பண்ணை வீட்டிற்கும் அழைத்து சென்று 24 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தினர்.

பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் இருந்து ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டன, மேலும் மதுரை டிஸ்ட்ரிபியூஷனை விஜய் அன்புசெழியனை வைத்து வெளியிட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் சிக்கியிருந்ததன் அடிப்படையில்தான் விஜயிடம் தீவிர விசாரணை நடைபெற்றதாகவும் வருமானவரித்துறையில் உள்ள அதிகாரிகள் நெருக்கமானவர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து விஜய் வீட்டில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும், ஆவணங்களை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் எடுத்து செல்வதாகவும் கூறப்பட்டது, இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய்யின் மாமனார் எனவும் அவர் விஜய்யின் பினாமி என்பதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாம், மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்த சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சம்மன் அனுப்பியுள்ளது.

Loading...

இன்றே விஜய் நேரில் ஆஜர் ஆகிவிளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கூற பட்டுள்ளதால் அடுத்த பரபரப்பு அதிகரித்துள்ளது, படப்பிடிப்பில் உள்ள விஜய் நேரில் வந்து விளக்கம் அளிக்காத பட்சத்தில் அடுத்த நடவடிக்கைக்கு வருமான வரித்துறை செல்லலாம் எனவும், பினாமி சொத்துக்கள் குறித்து தற்போதே வருமான வரித்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டால்..,

Loading...

வழக்கு அமலாக்கத்துறைக்கும் மாற்றப்படும் பட்சத்தில் விஜய்யின் மீது நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, இதனையடுத்துதான் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் தினமும் ரசிகர்களை படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து மத்திய அரசிற்கு வேறு மாதிரியான செய்தியை கொடுக்க நினைப்பதாகவும் ஆனால் அதனை மத்திய அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

©TNNEWS24

Loading...

Trending