Connect with us

சினிமா

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் – நடிகர் சிவக்குமாரின் மனிதநேய செயல் !

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் – நடிகர் சிவக்குமாரின் மனிதநேய செயல் !

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக சிவக்குமார் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகம் எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Loading...

இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Loading...

மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending