ரஜினி ஊட்டிவிட வேண்டுமா ? விமர்சனம் செய்த இயக்குனருக்கு எஸ் வி சேகர் பதில் !

ரஜினி ஊட்டிவிட வேண்டுமா ? விமர்சனம் செய்த இயக்குனருக்கு எஸ் வி சேகர் பதில் !

Loading...

சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 50 லட்ச ரூபாய் வழங்கிய ரஜினியை விமர்சனம் செய்த இயக்குனர் கௌதமனுக்கு எஸ் வி சேகர் பதிலளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகம் எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Loading...

இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் பண உதவி செய்தார். அதுபற்றி பேசிய இயக்குனர் கௌதமன் ‘ரஜினி பணத்துக்குப் பதில் மளிகைப்பொருட்களாக வாங்கிக் கொடுத்திருக்கலாம்’ எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள எஸ் வி சேகர் ‘ரஜினியை விமர்சனம் செய்து பிரபலம் ஆகலாம் என்று பார்க்கிறார். ஆனால் அது நடக்காது. விட்டால் ரஜினியை ஊட்டி விட சொல்வார்கள் போல’ என நக்கலாக பேசியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*