வீட்டின் முன் கும்பல்… கலைந்து போக சொன்ன நடிகருக்குக் கொலைமிரட்டல்!

வீட்டின்  முன் கும்பல்… கலைந்து போக சொன்ன நடிகருக்குக் கொலைமிரட்டல்!

Loading...

பிரபல நடிகர் ரியாஸ்கான் தனக்கு ஒரு சிலர் கொலை மிரட்டல் விடுத்தாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,00,000 ஐ நெருங்கியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் உலகம் முழுக்கவும் இப்போது அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5300 ஐ தாண்டியுள்ளது. அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் நம்முன் இருக்கும் ஒரே மருந்து தனிமனித இடைவெளிதான் என அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது கூட தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனால் பல இடங்களில் மக்கள் இதைக் கடைபிடிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரியாஸ்கான் அளித்துள்ள புகார் ஒன்றில் ‘ என் வீட்டின் முன்னர் ஒரு கும்பல் கூட்டமாக நின்றது. இதுபோல கும்பலாக நின்றால் வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக அவர்களிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் அதைக் காதில் வாங்காத அந்த கும்பல் என்னிடம் சண்டைக்கு வந்தனர். மேலும் அதில் ஒரு சிலர் என்னைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.’ எனப் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*