சூப்பர் ஸ்டார் நடிகரின் கொரோனா முடிவு வெளியானது!

சூப்பர் ஸ்டார் நடிகரின் கொரோனா முடிவு வெளியானது!

Loading...

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பிருத்விராஜின் கொரோனா சோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஆடுஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் மற்றும் அவருடையக் குழுவை சேர்ந்த 57 பேர் ஜோர்டான் எனும் நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சென்றனர். அப்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் படக்குழுவினர் இந்தியா திரும்ப முடியாமல் தவித்தனர்.

Loading...

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கேயே இருந்த அவர்கள் எப்படியோ அந்த நாட்டு அரசிடம் அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தினர். இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் அனைவரும் சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் தனக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இதன்  மூலம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*