Connect with us

சினிமா

இட்ஸ் ஓகே ப்ரோ – ரசிகரின் விமர்சனத்தை கூலாக ஏற்றுக்கொண்ட நடிகர் !

மாபியா படம் நன்றாக இல்லை என சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை கூறிய ரசிகருக்கு நடிகர் பிரசன்னா பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக போராடி வரும் நீரை நடிகர்களில் அருண் விஜய்யும் பிரசன்னாவும் முக்கியமானவர்கள். நல்ல திறமை இருந்தும் இருவரும் இதுவரை புகழ் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் சமீபகாலமாக அருண்விஜய் நடித்து வரும் படங்களில் கவனத்தை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கோலிவுட்டின் திறமையான இளம் இயக்குனர் என்ற அடையாளத்துடன் ஒரு வலம் வரும் கார்த்திக் நரேன், இந்த படத்தை இயக்கி இருப்பதால் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமானது. ஆனால் படம் வெளியானது முதல் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Loading...

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ‘ மாஃபியா படம் நன்றாக இல்லை’ என கூறி அதில் நடிகர் பிரசன்னாவை டேக் செய்து இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா ‘எல்லா படங்களிலும் பிடித்த விஷயங்களும் இருக்கும் பிடிக்காத விஷயங்களும் இருக்கும் ஆனாலும் உங்களது விமர்சனத்தை நான் தலைதாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

அவரின் இந்த நேர்மறையான பண்பு இரசிகர்கள் இடையே பாராட்டை பெற்று வருகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending