Connect with us

அரசியல்

சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி !

சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி !

சென்னை :

திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி, சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு பல நேரங்களில் மக்களை மகிழ்வித்திருக்கிறார்.

Loading...

தனது மகனை நம்பி திரைப்படம் ஒன்றில் முதலீடு செய்து மகனை ஹீரோவாக அறிமுகம் செய்தார் மயில் சாமி ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை அடையவில்லை, மாறாக படு தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு அதிரடியாக அரசியல் ப்ரவேசத்திற்குள் நுழைந்தார் மயில், சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனியாக படகில் சென்று உணவுகளை விநியோகித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

Loading...

அதன் பிறகு திடீர் என நடிகர் அடையாளத்தை துறந்து அரசியல் விமர்சகர் என்ற அடையாளத்துடன் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், அப்போது குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசிய அவர் ஒரு கட்டத்தில் தமிழர் நலனை காக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தொனியில் விமர்சனங்களை முன்வைத்தார்.

அதுவரை அவரை பாராட்டி வந்த ஒரு தரப்பினர் அவர் திமுகவின் பேச்சாளர் என்றுகூறி விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர், அதன் பிறகு மற்றொரு மிக பெரிய சம்பவம் தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அது வேறொன்றுமில்லை பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது அதுவரை அரசியல் விமர்சகராக வலம்வந்த மயில் சாமி திடீர் என பொருளாதார நிபுணராக மாறி மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

அன்று முதல் மயில் சாமி மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து எந்த விவாதங்களிலும் மயில் பங்கேற்பதில்லை தான் பெரிதும் எதிர்பார்த்த உதயநிதியோ அதன் பிறகு அவரது படங்களில் மயிலுக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை இதனால் அதிருப்தியில் இருந்த மயில் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் சொல்வதை தவிர்த்து வந்த மயிலிடம், இன்று சென்னை பீனீஸ் மாலிற்கு முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் குறித்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மயில்சாமியிடம் இளைஞர் ஒருவர் சார் பொருளாதார மந்தநிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்ப ஒரு நிமிடம் ஏதோ சொல்லவந்து சுதாரித்து கொண்ட மயில் சாமி நாடு நன்றாக போகிறது எல்லாரும் அவுங்க அவுங்க வேலையை பாருங்க நன்றாக படிங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்போது, விடாமல் கேள்விகேட்ட இளைஞரை நோக்கி ஐயா சாமி ஆளை விடு என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு ஓடிவிட்டார் மயில்சாமி.

அதனை தொடர்ந்து பலரும் இந்த தகவலை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர், ஒரு தரப்பினர் மயிலின் கருத்திற்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் மயில் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்துவிட்டதாகவும் கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எது எப்படியோ மயில் நிறையா அடிபட்டுவிட்டது போல !!!!

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending