Connect with us

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விசு மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விசு மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் கதாசிரியர் என பல துறைகளில் ஜாம்பவானாக மிளிர்ந்த விசு இன்று மாலை மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பாலசந்தரின் படங்களுக்கு கதை வசனம் எழுதி அறிமுகமானவர் விசு. அதன் பின்னர் அவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் மற்றும் திருமதி அவள் வெகுமதி ஆகிய படங்களின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையை திரையில் காட்டி பிரபலமானார்.

Loading...

பல படங்களில் நடிகராகவும் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான அரட்டை அரங்கம் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமானார். இந்நிலையில் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஓய்வில் இருந்த அவர் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்பொது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

Loading...

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் உலகை சேர்ந்தவர்கள் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending