Connect with us

Uncategorized

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், இவ்வளவு ரூபாய் பரிசா…? அரசின் அதிரடி திட்டம்

புதுச்சேரியில் சட்டசபை நேற்று கூடியது. அப்போது அதில் 2019 மற்றும் 2020 ற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை பற்றி பிரச்சனை எழுப்பினார்கள். மேலும் போன வருஷம் நாராயண சாமியால் கொண்டு வரப்பட்ட பட்ஜெட்டே இன்னும் நிறைவேற்ற படாத நிலையில் , எதுக்காக மக்களை ஏமாற்ற இந்த வெத்து பட்ஜெட் என எதிர்கட்சி கேள்வி எழுப்பியது.

இதனால் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் , அதிமுக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த் பட்ஜெட் 8500 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதன் விவரம், சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றி அவரை மருத்துவ மனையில் சேர்த்தால், காப்பாற்றியவர்க்கு 5000 பரிசாக வழங்கப்படும் என்று அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.

மேலும் சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு 5000 ரூபாய் விதமும், பயறு வகைகளுக்கு 2000 ரூபாய் விதமும் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 76 லட்சம் கூடுதல் சிலவாகும். மேலும் மீனவர் நிவாரணத்தொகையை உயர்த்துவது, காவல் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending