Connect with us

Uncategorized

கொடூர விபத்து, உயிர் தப்பிய நடிகர் தவசி, பிரபல கேமரா மேன் பலி….

தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை மலையடிவார பகுதியில் 25 நாட்களாக டி.வி தொடர் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , கேமராமேன்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் உத்தமபாளையம் அருகே காரில் சென்று கொண்டிருந்தனர், காரை நடிகர் தவசி ஓட்டினார். நடிகர் தவசி, கொம்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், போன்ற படங்களில் நடித்தவர் . அவருடன் சென்னையை சேர்ந்த பிரபல கேமராமேன் சிவாவும் உடன் பயணித்தார்.

கோம்பை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டை விட்டு கீழே இறங்கி 4 முறை உருண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கார் சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார், நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த விபத்தில் இறந்த கேமராமேன் சிவாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான கேமராமேன் சிவா, நடிகர்கள் அஜித், விஜய், போன்றவர்களின் படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending