மாணவியிடம் சில்மிஷம்: தர்ம அடி கொடுத்த மாணவர்கள்

Loading...

பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு அந்த மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. குரு என்பவர் போற்றப்படும் நபராக இருக்க வேண்டிய நிலையில் அவரே பாலியல் தொல்லை கொடுப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பால்கரன்பூர் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவருக்கு அந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் சில்மிஷம் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவர்கள் உடனடியாக கம்புகள், உருட்டுக்கட்டைகள் மற்றும் கல்லூரி அருகே கிடைத்த ஆயுதங்களை எடுத்து அந்த ஆசிரியரை தர்மஅடி கொடுத்து துவைத்து எடுத்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Loading...

இதனை அடுத்து அந்த கல்லூரியின் மற்ற பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி, சில்மிஷம் செய்த ஆசிரியரை தனியே அழைத்து சென்று பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேராசிரியர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமன்றி ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கிய மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு சில மாணவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கல்லூரி ஆசிரியர் ஒருவர் சில்மிஷம் செய்ததற்காக ஒட்டுமொத்த மாணவர்கள் ஒன்றிணைத்து தர்மஅடி கொடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*