காலில் செருப்பு போடும் நிலையே வராதா? சபதம் விட்டு வெறும் காலில் நடக்கும் திமுக தொண்டர் ! எல்லாம் ஸ்டாலினால் வந்தது??

கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் உண்டு. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் திமுக கட்சியின் மீது தீராத பற்று கொண்டவர். தமிழக அரசியலில் எந்த சட்டமன்றத் தொகுதியும் ஒரு கட்சியின் கோட்டையாக இருக்க முடியாது.

Loading...

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்தது. திமுகவின் விசுவாசிகள் அதிகம் நிறைந்த சட்டமன்ற தொகுதியில் கலசப்பாக்கமும் ஒன்றாகும். ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த திமுகவின் அரசியல் பலம் கடந்த நான்கு தேர்தல்களாக சரிந்ததால் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்து திமுகவின் வெற்றிக்கனி தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால் தொடர்ந்து திமுக தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் சமூக வலைதளங்களில் சூடு பிடித்து மக்களிடம் இருந்து உடனடி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. திமுகவின் தொண்டர் காளியப்பனை பிற கட்சி தொண்டர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து கேலி செய்து வந்த காரணத்தால் காளியப்பன் வெறுப்பின் உச்சகட்டத்தை அடைந்து, தனது சட்டமன்ற தொகுதியில் திமுக எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போதுதான் காலில் செருப்பு போடுவேன் என்றும், அதுவரை செருப்பு போடாமல் வெறும் காலில் நடப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக செருப்பு அணிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Loading...

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக் குழு பதவிக்கு போட்டியிட்டு காளியப்பன் வெற்றி பெற்றது ஒருபக்கம் இருந்தாலும், திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் காளியப்பனை செருப்பு போட சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி இரண்டு மாதங்களில் கலையும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கலையும் என சொல்லிவந்ததை பார்த்த இவர் சபதம் விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போதுவரை ஆட்சி கலையவும் இல்லை தேர்தலும் வரவில்லை என்பதால் வெறும் காலிலேயே நடந்து வருகிறாராம் வரும் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் வெள்ளை நிற செருப்பு வாங்கி வைத்துள்ளாராம், அவரது கனவு நிறைவேறுமா இல்லை வருடம் முழுவதும் அவர் செருப்பு போடாமல்தான் நடக்கவேண்டியது இருக்குமா என்பது தேர்தலுக்கு பின்புதான் தெரியவரும்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*