Connect with us

#24 Exclusive

நடிகர் சங்கத்திற்கும் ஆப்பு வைத்த தமிழக அரசு

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என இரண்டு முக்கிய பதவிகளில் நடிகர் விஷால் கைப்பற்றி இருந்தார். இரண்டு முக்கிய பதவிகள் தன் கைவசம் இருந்ததால் அந்த பதவியை வகித்தவர் அவர் ஆட்டம் போடுவதாகவும், சில விஷயங்களில் விஷால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் திரையுலகினர் சிலர் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து அவரது பதவியைப் பறிக்கும் திரையுலகின் ஒரு பிரிவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இதனால் விஷாலின் ஒரு பதவி பறிக்கப்படது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத்திற்கு பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்பட 9 பேர் அடங்கிய ஒரு குழு நியமனம் செய்து, அந்த குழுவின் வழிகாட்டுதலின்படி தனி அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என்றும் அறிவுறுத்தப்பட்டது

Loading...

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை அடுத்து நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரியை ஏன் நியமனம் செய்யக்கூடாது என்று தமிழக அரசின் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொதுச்செயலாளர் விஷால் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பதிலளிக்கப்பட்டது

Loading...

இந்நிலையில் விஷாலின் பதில் ஏற்றுக் கொள்ளப்படாமல் தற்போது கீதா என்ற அதிகாரியை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு பதிவுத்துறை நியமனம் செய்துள்ளது. இதனையடுத்து தற்போது விஷால் தனது இரண்டு முக்கிய பதவிகளையும் இழ்நதுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

Trending