Connect with us

#24 Exclusive

90% முடிந்துவிட்டது: தனுஷின் அதிரடி டுவீட்!

தனுஷ் நடிப்பில் ’பரியேறும்பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கர்ணன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக நெல்லையில் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தங்குதடையின்றி படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் இரண்டு மாதங்களாக இடைவெளி என்று தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்து விட்டதாக தனுஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ’கர்ணன்’ படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்புகள் சென்னையில் படமாக்கப்படும் என தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடராஜன் என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர்.

Loading...

இதனை அடுத்து தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அக்சயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending