அதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் !

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 872 குழந்தைகள் மற்றும் 136 கர்ப்பிணிகள் சிகிச்சையின்போது பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு 463 குழந்தைகளும், 2018-ம் ஆண்டு 409 குழந்தைகள் என மொத்தம் 872 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டில் 81 கர்ப்பிணிகளும், 2018-ம் ஆண்டில் 55 கர்ப்பிணிகளும் என 136 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி மற்றும் பெண் குழந்தைகளுக்கு என சிறப்பு சிகிச்சை அளிக்கும் பிரிவு 150 கோடி செலவில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில், கர்ப்பிணிகள் உயிரிழப்பு சம்பவம் பொதுமக்‍களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*