கொரோனா சிகிச்சையில் குணமான 74 வயது பாட்டி ! தமிழக மருத்துவர்கள் சாதனை!

கொரோனா சிகிச்சையில் குணமான 74 வயது பாட்டி ! தமிழக மருத்துவர்கள் சாதனை!

Loading...

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5300 ஐ தாண்டியுள்ளது.

Loading...

தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று புதிதாக 48 கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 26 முதல் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும் நிலையில் 74 வயது மூதாட்டிக்கு சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளனர் தமிழக அரசு மருத்துவர்கள்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*