5 கண்கள் கூட்டணியில் இந்தியா தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஆப்பு !!

சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை பேணுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க காங்கிரஸின் உயர்மட்ட குழு, இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் மூன்று பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை உளவுத்துறை சார் தகவல் பகிர்வுக்காக ‘ஐந்து கண்கள்’ என்று சொல்லப்படும் கூட்டனியில் இணைக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

Loading...

இந்த ஐந்து கண்கள் என்பது (FIVE EYES – FVEY) ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இந்த நாடுகள் சமிக்ஞைகள் மற்றும் உளவுத்துறையில் கூட்டு ஒத்துழைப்புக்கான ஒரு ஒப்பந்தமான பலதரப்பு UKUSA ஒப்பந்தத்தின் உறுப்பினர்களாகும்.
இந்த ஐந்து கண்கள் கூட்டனியானது உலகில் எந்த சர்வதேச அமைப்புக்கும் (ஐ.நா உட்பட ) கட்டுப்படாது,
இதனை கட்டுபடுத்தும் அதிகாரம் இந்த கூட்டணியில் உள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழவுக்கு மட்டுமே உள்ளது. இந்த உயர்மட்ட குழு சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே பதில் சொல்லும் அந்தந்த நாட்டு பாராளுமன்றங்கள் கூட இதன் நிர்வாகம் அல்லது நடவடிக்கைகளில் தலையிடவோ அல்லது கேள்வி கேக்கவோ முடியாது.

இந்த கூட்டணி இன்றைய உலகின் மிகப்பெரிய உளவு வலைபின்னலை கொண்டது, ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் பலகோடி மக்கள் இதன் நேரடி கண்காணிப்பின் கீழ் தான் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

இதற்ககென பிரத்யேகமாக எக்கலான் (ECHELON) என்கிற அமைப்பு பயன்படுத்தபடுவதாக சொல்லப்படுகிறது அதாவது கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் செயற்கைகோள்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் உலகின் எந்த மூலைக்கும் தகவல் பரிமாற்றம் சில வினாடிகளில் நடைபெறும்.
இந்த கூட்டனி நினைத்து பார்க்க முடியாத சக்தி கொண்டது , எங்கும் எந்த நேரத்திலும் ஊடுருவி யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கும் ஆற்றல் படைத்தது, அதாவது ஐ.நா பொது சபையே இதன் இலக்குகளில் ஒன்றாகும்.

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில் இதன் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.
தற்போது இந்த கூட்டனியில் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

புலனாய்வு தொடர்பான நிரந்தர குழுவின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் ஷிஃப், பிரதிநிதிகள் சபைக்கு வியாழக்கிழமை அளித்த அறிக்கையில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை ‘ஐந்து கண்கள்’ கூட்டணியில் கொண்டுவர வேண்டும், இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும்
அமைதியையும் பராமரிக்க முடியும் என கூறியுள்ளார்.

புலனாய்வு பாதுகாப்பு செயலாளரின் கீழ் உள்ள குழு, அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் உடன் இணைந்து, சட்டம் இயற்றப்பட்ட 60 நாட்களுக்குள், இந்தியா, ஜப்பான், கொரிய குடியரசு அல்லது தென் கொரியா மற்றும் ‘ஐந்து கண்கள்’ நட்பு நாடுகளுக்கு இடையில் தகவல் பகிர்வு வழிமுறைகளை விரிவுபடுத்துவதை குறித்த அபாயங்கள், நன்மைகள் மற்றும் சவால்கள் பற்றிய ஒரு அறிக்கையை அமெரிக்க காங்கிரஸின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுக்களுக்கு சமர்ப்பிக்கும்
என்று ஷிஃப் கூறினார்
இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத நாடுகளான “இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற மூன்றாம் தரப்பு பங்காளிகளின் பங்களிப்புகளை இந்த குழு ஆதரிக்கிறது, மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள பங்களிப்பை அங்கீகரிக்கிறது” என்று அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை கூறியுள்ளது.

இது நிறைவேற்றப்பட்டால் உலகின் சக்தி வாய்ந்த அமைப்பு ஒன்றில் நமது இந்திய தேசமும் இடம்பெறும் இதன் மூலம் பல அபாயங்களை முன்கூட்டியே தடுக்கலாம்.மேலும் உள் நாட்டில் பிரிவினையை தூண்டும் தலைவர்களை பற்றிய ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் அறிந்து நாட்டை விட்டே வெளியேற்றவும் உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*