Connect with us

#24 Exclusive

அந்த 4 பேரு ஆபாசமா பேசுறாங்க கதறி கொண்டு பாஜக அமைச்சரிடமே முறையிட்ட நெல்லை கண்ணன் பரபரப்பு !

Published

on

சமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளத்தில் தன்னை சிலர் மிகுந்த ஆபாசமாக பேசுவதாகவும், இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்துள்ளதாக நெல்லை கண்ணன் கதறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நெல்லை கண்ணனை பாஜகவினர் சமூகவலைத்தளத்திலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு இதுவரை இல்லாத அளவு புது புது வார்த்தைகளை கண்டுபிடித்து,நெல்லை கண்ணனை திட்டி வருவதாகவும், இதனால் வேறு வழியின்றி தனது செல் போன் எண்ணை நெல்லை கண்ணன் ஆப் செய்து வைத்திருப்பதாக கூறப்பட்டது, அது தற்போது உண்மை ஆகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நெல்லை கண்ணன் அன்புள்ளம் கொண்டவர்களே நாலே நாலு ஐடியை வைத்துக் கொண்டு நிறைய பேர் நம்மை எதிர்ப்பது போல் நாலு பேரே எழுதுகின்றனர் நம்முடைய ஐடி இளவல்கள் கண்டு பிடித்து விட்டனர்

Loading...

இது வரை அவர்கள் ஆபாசமாக மனித நாகரீகமே இல்லாமல் எழுதியவை அனைத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ளோம்ம் அவர் தமிழர் தானே தமிழகத்தில் என்ன நடக்கின்றது அவர் தெரிந்து கொள்ளட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

அதாவது நெல்லை கண்ணனை 4 பேர்கள் மட்டும்தான் தரக்குறைவாக பேசுவதாகவும், மீதமுள்ளவர்கள் அவரை திட்டவில்லை என்று சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவிக்க ஒரு 50 பேர் வந்து பழையபடி அவரை வறுத்து எடுத்து வருகின்றனர், மேலும் பழைய பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நெல்லை கண்ணன் விமர்சனம் செய்த வீடியோவை பகிர்ந்து இதைவிட கேவலமாக பேச முடியாது என்றும்..,

தரக்குறைவாக பொது கூட்டங்களில் பேசிவிட்டு தற்போது அதே பதிலடியை மற்றவர்கள் கொடுக்கும் போது வலிக்கிறதா எனவும் பார்ப்பனர் என செல்லும் இடங்களில் திட்டி விட்டு தற்போது பார்ப்பனர் ஒருவருக்கே கடிதம் எழுதியது எந்த வகையில் நியாயம் எனவும் பலரும் நெல்லை கண்ணனை விமர்ச்சித்து வருகின்றனர்.

சுகர் பேஷண்ட் எனவும் இரவில் போன் செய்து காதில் கேட்க முடியாத வார்த்தைகளில் அவரை வசை பாடுவதாகவும் அவரை சந்தித்தவர்களிடையே தெரிவித்துள்ளார், மேலும் தினமலர் தன்னை பற்றி தவறாக விமர்சனம் செய்ததால் இதுவரை தினமலர் படிக்காத நான், இனி தினமலர் உரிமையாளர் குறித்த சில தகவல்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் நெல்லை கண்ணன் நிலைமை கரண்டு கம்பத்தில் சிக்கிய காக்கை போல உள்ளதாக ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் !!

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending