சென்னையில் மாலில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா ! அவரோடு தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

சென்னையில் மாலில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா ! அவரோடு தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

Loading...

அரியலூரைச் சேர்ந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் பணிபுரிந்த மாலில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் கொரோனா சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா அதிகமாகப் பரவ ஆரம்பித்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை முதலிய பெரு நகரங்களில் இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பினர். அப்படி சென்னையில் இருந்து அரியலூருக்கு வந்த பெண்ணுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

Loading...

இந்நிலையில் அவர் பணிபுரிந்த இடத்தைப் பற்றி விசாரிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. அவர் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வந்துள்ளார். சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடும் பீனிக்ஸ் மாலும் ஒன்று என்பதால் அவர் மூலமாக வேறு யாருக்கேனும் பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

அதனால் அந்த மாலில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிகளில் வந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதியடுத்து அப்பெண்ணுடன் தொடர்புடைய 3200 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் இப்போது அந்த சோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அந்த 3200 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*