Connect with us

#24 Exclusive

28.10.2019 குரு பெயர்ச்சியால் இராஜயோகம் பெரும் இராசிக்காரர்!

Published

on

28.10.2019 குரு பெயர்ச்சியால் இராஜயோகம் பெரும் இராசிக்காரர்!

அக்டோபர் 2019 மாதம் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிகளில் மட்டுமே குரு பகவான் நல்லது பண்ணுவார் என இல்லை. இந்த குறிப்பிட்ட ராசிகளில் குருபகவான் கோட்சார ரீதியாக பல நன்மையான பலன்களை செய்வார் என்பதால்தான் குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே ராஜ யோகம் பெரும் இராசிக்காரர் ஆவார். 2019 அக்டோபர் மாதம் குருபெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதில் விருச்சிக ராசியில் சந்தித்த குரு பகவான் இந்த விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு மூல நட்சத்திரம் ஒன்றாம் பாதத்திற்கு அதாவது தனுசு ராசி குருபெயர்ச்சி யாளராக இருப்பார். குரு பெயர்ச்சியின் சிறப்பில் இதுவரைக்கும் செவ்வாயின் வீடான விருச்சகத்தில் இருந்த குரு பகவான் இப்பொழுது தன்னுடைய வீடான தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகி, அடுத்த ஒரு வருட காலத்திற்கு தன்னுடைய பலன்களை கோட்சார ரீதியாகவும், தன்னுடைய பார்வை ரீதியாகவும் வழங்கி இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியின் மூலமா எந்த ராசிகள் சிறப்பான நல்ல முன்னேற்றங்களை அடைய போகுது என பார்க்கும்போது அதில் குறிப்பிட்ட ராசிகள் குருபகவான் கோட்சார ரீதியாக பல நன்மைகள் மற்றும் பலன்களை செய்வார் என்பதால் தான் குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
குருப்பெயர்ச்சி மூலமாக மிக சிறந்த யோகங்களை தரக்கூடிய ராசி
மேஷம் ராசி:

  கடந்த ஒரு வருட காலமாக கடந்த குருப்பெயர்ச்சியியிலிருந்து இந்த குருப்பெயர்ச்சியின் காலகட்டம் அவ்வளவு சிறப்பான கட்டணம் ஆகும். அதாவது மேஷம் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டம குருவை வீற்றிருந்து பல வகையிலும் பல கஷ்டங்களை கொடுத்திருப்பார்.   அஷ்டம குருவால் பல பிரச்சினைகள் இருக்கும், அடிக்கடி உடல் நலக்குறைவு இருக்கும், நோய்க்கான செலவு அதிகமாக இருக்கும், ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மனக்கஷ்டம் தேடி வந்திருக்கும், முக்கியமாக சுபநிகழ்ச்சிகள் தடைபடு இருக்கும். இந்த மாதிரியான  எதிர்மறையாக நடந்து இருக்கும். மேஷா ராசி  பொருத்தவரைக்கும் வரும் 28..10. 2019 அந்த நாள் வரைக்கும் தான், அதன் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம குரு 9-ஆம் இடமான தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சியாளர்க்கு  மிக மிக உன்னதமான பலன்களை மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செய்யப் போகிறார். முக்கியமாக இதுவரைக்கும் இருந்த பிரச்சினைகள் மற்றும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் மற்றும்  பொறாமை இருந்தவர்கள் உங்களை விட்டு விலகும் .அதேசமயம் புதிய உற்சாகம் பிறக்கும், மேஷ ராசியை பொறுத்த வரைக்கும் குருப்பெயர்ச்சிக்கு அப்புறம் எந்த ஒரு காரியம் எடுத்தாலும் அகில வெற்றிகரமாக முடிக்கக் கூடிய  ஆற்றல் குரு பகவான் தருவார். அதேசமயம் பணப்புழக்கம் இந்த காலகட்டத்தில் நன்றாகவே சிறந்த முறையில் இருக்கும். பல வருடங்களாக திருமணம் ஆகாத ஆண்களுக்கு வரம் கிடைக்கும். மேஷ ராசியை பொறுத்த வரைக்கும் குரு பகவான் 5-ஆம் பார்வையாக ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் மிக மிக நல்ல விஷயம் அமையும். எந்த பிரச்சனையும் வர விடாமல் தடுக்கும். இதுவரைக்கும் இருக்கும் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு கொண்டுபோகும்.

மிதுனம்:

              ராசி  மிகச்சிறந்த யோகத்தை தரக்கூடிய ராசி ஆகும். மிதுனம் ராசிகர்கள் கடந்த ஆண்டு குருப்பெயர்ச்சி இருந்து இந்த குருப்பெயர்ச்சி வரைக்கும் ஓராண்டு கால கட்டத்தில், ஆறாம் இடத்தில் இருக்கும்  குருபகவான் நிறைய கஷ்டங்களை கொடுத்திருப்பார்.  பின்பு உடல்நலம் குறைவு  ஏற்பட்டு இருக்கும் தடைகள்,குழப்பம் ஏற்பட்டு இருக்கும் .தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும், சிறிய விஷயங்கள் இருந்தாலும் கூட மிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.28.10. 2019 அக்டோபர் மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு ஏழாம் இடமான தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சிஆகிறது.  இதனால் பல வகையில் பலன்கள் கிடைக்கும். குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு மாறுவது மிக அற்புதம் இதனால் குருபகவான் பலன்களைத் தருவார்.

சிம்மம் :
மிக உன்னதமான பலன்களை பெறக்கூடிய ராசி சிம்ம ராசி. கடந்த ஒரு வருட காலமாக சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் குருபகவான் இருந்தார். இதனால் ஏதும் நன்மை ஏற்பட வில்லை, கெடுபலன்கள் மற்றும் தான் நடந்திருக்கும். எந்த ஒரு முன்னேற்றமும் இருந்திருக்காது, அதிக ஏமாற்றம் நண்பர்களிடம் இருந்து இருந்திருக்கும், இதனால் இந்த மாதிரியான நிலைகள் நான்காமிடத்தில் குருபகவான் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு வைத்திருப்பார். கடந்த இரண்டு வருட காலமாக எந்த ஒரு நன்மையும் அளித்து இருக்க மாட்டார். இனி வரும் 28 10 2019 ஆம் ஆண்டிலிருந்து சிம்மராசிக்கு குரு பகவான் 5-ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகிறார். தனுசு ராசியிலிருந்து 9 பாகம் 11 என குரு பகவான் பெயர்ச்சியாகிறார், அதாவது குருபகவான் மூன்று இடங்களை பார்க்கிறார். இதனால், சரளமாக பணவரவு ஏற்படும். நோய் நொடிகளை விலக்கிவைக்கும், மதிப்பு மரியாதை இழந்ததை மீண்டும் தேடி வரும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும், தடைகள் ஏதும் ஏற்படாது.
விருச்சகம் :
மிக சிறந்த யோகங்களை தரக்கூடிய ராசி விருச்சிக ராசி கடந்த இரண்டு வருட காலமாகவே உங்களுக்கு நேரம் சரியில்லை அது குருபகவான் இரண்டாவது இடத்தில் இருப்பதால் இதனால் அதிக சிக்கல்கள், பிரச்சினைகள் பல விதமான துன்பங்கள் மட்டுமே நடந்து இருக்கும். குரு பகவான் விருச்சகம் ராசிக்கு கடந்த ஒரு வருட காலமாகவே அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். உடல் நலம் கவனித்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் மற்றும் தொழில் சம்பந்தமாக அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கும். குருபெயர்ச்சி விருச்சகம் ராசியில் இரண்டாம் இடம் இருப்பதால் உங்களுக்கு எந்த உடல் நலக் குறை இருந்தாலும் குருபகவான் தீர்த்து வைப்பார். இதனால் வருமானம் பல மடங்கு ஆகும். பொருள், பணம், வாக்கு போன்றவற்றை கோட்சார ரீதியாக குரு பகவான் 2-ம் இடத்திற்கு நன்மைகளை தருவார். மற்றும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினைகள் தீரும், ஒற்றுமை கூடும்.

கும்பம்:
மிகச் சிறந்த பலன்களை பெறக்கூடிய ராசி கும்பம். கடந்த ஒரு வருட காலமாக குரு பகவான் 10ம் இடத்தில் இருப்பதால். இதனால் பல வகையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. அதாவது “யானைமேல் ஏறி பாறை மீது விழுந்தான்” என்று சொல்வது போல் பல தொழில்கள் முடக்கும் அடைந்து தொழில் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டிருக்கும், உடல்நலக் குறைவு அடிக்கடி ஏற்பட்டு இருக்கும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொட்டதெல்லாம் நஷ்டத்தில் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும். இனிமேல் 28.10.2019 மாதம் குரு பகவான் தன்னுடைய ராசிக்கு இடமான பத்தாம் இடம் இருந்து பதினோராவது ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் பல வகையில் உன்னதமான பல யோகங்களை தர காத்திருக்கிறா.ர் 11-ஆம் இடத்துக்கு குரு பகவான் வருவதால் ராஜ மரியாதை ஏற்படும். தாய் தந்தை மற்றும் பெற்ற குழந்தைகள் மூலம் ஏதோ ஒரு வகையில் செல்வம் வந்து சேரும், குருபகவான் பார்வை சிறப்பாக இருப்பதால், தனுசு ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக 3-ஆம் இடம் பார்வை படுவதால் ,பல யோகங்கள் வந்து சேரும் ,சகோதர சகோதரிகளின் திருமணம் நன்றாக நடக்கும், முயற்சிகள் வெற்றியடையும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share