#24info அமிட்ஷா தலைமையில் சென்னையில் ஆலோசனை முடிவு புதிய தமிழக பாஜக தலைவர் யார் !

Loading...

சென்னை.,

பாஜக தேசிய தலைவர் அமிட்ஸா நேற்று மாலை சென்னை வருகை தந்தார். இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தினை இன்று வெளியிடுகிறார் அமிட்ஷா இவை செய்திகளில் வந்த தகவல்கள் ஆனால் மூன்று முக்கிய முடிவுகளை தமிழக பாஜகவினருடன் ஆலோசனை செய்வதற்காக வருகை தந்திருக்கிறார் அமிட்ஷா.

Loading...

தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்கும் தமிழிசையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது, அதனை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், யாரை தேர்ந்தெடுப்பது என்ற தீவிர ஆலோசனையில் பாஜக தலைமை உள்ளது.

அதற்கு காரணம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர் அனைவரையும் அரவணைத்து செல்வதுடன், கட்சியின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அதன் நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள் தனி அணியாக இருப்பது, குறிப்பிடவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே கட்சிகளில் பதவிகள் வழங்குவது உள்ளிட்ட குற்றசாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல் கட்சியை வளர்த்தெடுக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் உள்ளிட்ட கட்டாயம் பாஜக தலைமைக்கு உள்ளது.

நேற்று இரவு சென்னை வந்த அமிட்ஷா தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனக்கு நெருக்கமான நபர்களிடம் ஆலோசனை நடத்தினார், அவரை கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் சந்தித்து களம் நிலவரங்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து இன்று காலை தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுத்தல், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலை , உறுப்பினர் சேர்க்கை நிலவரம் ஆகிய அனைத்து நிகழ்வுகளையும் கலந்தாலோசிக்கிறார்கள்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை தற்போது பெண் தலைவர் இருப்பதால் மீண்டும் பெண் தலைவர் வேண்டாம் என்ற கருத்தினை முக்கிய தலைவர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் இந்த முறை இதுவரை தலைவர் பொறுப்பில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதில் டெல்லி தலைமை உறுதியாக உள்ளது.

அத்துடன் தென் மாவட்டதிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தலைவரை தேர்ந்தெடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. அந்தவகையில் இந்த முறை தலைவர்பதவிக்கான ரேஸில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் இணைந்துள்ளார்.

தற்போதுவரை பாஜக தேசிய செயலாளர் H ராஜா, பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் , மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் யார் தேர்வாகிறார்கள் என்பது இன்று மாலை உறுதியாகிவிடும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் மாற்றம் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*