Connect with us

அரசியல்

#24breaking இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் இனி தேர்தலில் போட்டியிட முடியாது மத்திய அரசு அதிரடி !

மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்ததுபோல் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் தீவிரவாத சூழலும் அதற்கு உறுதுணையாக இல்லாமல் மாநில அரசு பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்து இயங்கி வந்ததுமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது.

Loading...

அத்துடன் இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் காங்கிரஸ், திமுக மற்றும் அதனுடன் கூட்டணியில் உள்ள உதிரிக்கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளே குறிப்பாக இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக மோடி அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதாகவும் இப்போது தெரிகிறதா இந்தியா செய்த துரோக செயல் என்னவென்று !

Loading...

என்ற தொனியில் பாகிஸ்தான் நாட்டின் அதிகார பூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டு சர்வதேச அளவில் இந்தியாவிற்கு நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவிற்கு வந்துள்ளது, குறிப்பாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக ராணுவத்தினை விலக்கி கொண்ட பிறகு எப்படியும் போராட்டம் வெடிக்கும் அதனை நாடுமுழுவதும் உள்ள கட்சிகள் ஊதி பெரிதாக்க முடியாத அளவிற்கு அதிரடி திட்டம் ஒன்றிணை தீட்டியுள்ளது.

இனி இந்தியாவின் நிலம் சார்ந்த இடங்கள், நாட்டிற்கு எதிராக மேடை பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதம் பேசுதல், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை வெளிப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் புதிய சட்டம் ஒன்றிணை இயற்ற இருக்கிறது. குறிப்பாக இதனால் இனி இந்திய இறையாண்மைக்கு எதிராக சமீபத்தில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமில்லை என்று திருமாவளவன் போன்றோர் பேசியதுபோல் பேசினால் 20 வருடங்கள் அரசியலில் ஈடுபட முடியாது.

அத்துடன் அவர்களின் ஓட்டுரிமையும் ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர மத்திய அமைச்சரவை குழு கூடி சிறப்பு அவசர சட்டத்தை இயற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையை இழக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாளை டெல்லியில் திமுக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

©TNNEWS24

Loading...

Trending