Connect with us

#24 Exclusive

காப்பற்றப்பட்ட 21 வயது இளைஞர் ! மோடியை விமர்சனம் செய்த ஸ்டாலின் கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட மரண அடி ! நீங்களும் பயனடைய மறக்காதீர்கள் !

Published

on

காப்பற்றப்பட்ட 21 வயது இளைஞர் ! மோடியை விமர்சனம் செய்த ஸ்டாலின் கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட மரண அடி ! நீங்களும் பயனடைய மறக்காதீர்கள் !

கடந்த ஆண்டு மத்திய அரசு உலகிலேயே மிக பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தியது, அதனை மத்திய அரசின் முக்கியமான சாதனை என்றும் இனி நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் யாரும் பாதிக்கப்பட்டோம் என்ற நிலை இருக்கக்கூடாது என்ற நிலை உருவாகும் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார் மேலும் இதன்மூலம் 5 லட்சம் வரை பலன் கிடைக்கும் என்றும் உடனடியாக இந்த திட்டத்தில் பலன் கிடைக்கும் என்றும்.,

நாட்டில் 40 % நபர்கள் மிக பெரிய செலவினை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டு,கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கான செலவீனம் சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட செலவுத் தொகை, சம்பந்தப்பட்ட நபரின் வருமானத்திற்கு அதிகமாக செலவிடுவது. கிராமப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்ப வருமானம்  / சேமிப்பில் 68 சதவீத அளவிற்கும், 25 சதவீதம் கடன் வாங்கியும் செலவு செய்கின்றனர். நகர்ப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருமானம்  / சேமிப்பில் 75 சதவீதமும், 18 சதவீதம் கடன் வாங்கியும் மருத்துவமனைகளுக்கு செலவிடுகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக மருத்துவச் செலவு செய்வதன் காரணமாக, இந்தியாவில் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம், இதுபோன்ற வருவாய்க்கு அதிகமான செலவுகளை குறைக்கும் என்றும் கூறியிருந்தார். அப்போது மத்திய அரசு தேர்தலுக்காக செய்த பம்மாத்து வேலை இது ஒரு வெற்று விளம்பரம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர், கனிமொழி இதனை ஏமாற்று வேலை என்றும் எதையும் செய்யாத பாஜக விளம்பரம் மட்டும் செய்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தற்போது இந்த திட்டம் தன் உயிரை எவ்வாறு காப்பாற்றியது என சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் தெரிவித்த போது ஒட்டுமொத்த நாடும் நெகிழ்ச்சி அடைந்துள்ளது, ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு ஒரு நாளைக்கு 14 மணி நேரம் சுமை தூக்குவது உள்ளிட்ட கடுமையான வேலைகளை 17 வயதில் இருந்து செய்து வந்தேன் ஆனால் என் நேரம் எனக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது இதயத்தில் இரண்டு வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை சரி செய்ய இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர்.

அன்றாட செலவிற்கே என் குடும்பம் என்னுடைய வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் அவ்வளவு பெரிய தொகைக்கு வாய்ப்பே இல்லை என்றும் மரணம் வந்தால் வரட்டும் என்று மிகுந்த வேதனையோடு முடங்கி கிடந்தோம், அந்த சூழ்நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரியவர உடனடியாக மையத்தை அணுகி விசாரித்தபோது எனக்கு தேவையான அனைத்து செலவையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் என்றும் காப்பீடு நிறுவனம் மருத்துவ மனைக்கு பணத்தினை செலவு செய்துவிடும் என்றும் தெரிவித்தனர்.

தற்போது நான் உயிருடனும் என் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணம் இந்த திட்டம்தான் என்று தெரிவித்தார் மேலும் பலர் நாட்டில் இது குறித்து அறியாமல் இருக்கிறார்கள் அவர்களும் உடனடியாக இந்த திட்டம் குறித்து தெரிந்து பயன் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்த திட்டத்தை பயன் இல்லாத திட்டம் என்றார்களோ அதே திட்டத்தின் மூலம் மொத்த பயனாளிகளில் 21% நபர்கள் தமிழகத்தில் இருந்து மட்டும் பயன் பெற்றுள்ளனர். இது ஒன்றே அரசியலுக்காக விமர்சனம் செய்த ஸ்டாலின் கனிமொழி போன்றோருக்கு மரண அடி என்று பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்ந்து பயன் அடையுங்கள், தெரியாதவர்களுக்கும் எடுத்து சொல்லி உயிரை காப்பாற்ற உதவுங்கள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமருடன் நேற்று ஆயுஷ்மான் திட்டத்தால் பயனடைந்த நபர்கள் சந்தித்த போது எடுத்த புகைப்படம்.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share