சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்
சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்
தக்காளி மற்றும் தயிர் இரண்டையும்
நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக
செய்து போட்டு கொள்ளவும். சிறிது
நேரம் மசாஜ் செய்து, பின், இந்த
பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து
முகம் கழுவ வேண்டும்.

இது சருமத்தில்
உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை
பளபளப்பாக வைக்க உதவுகிறது.
தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை
மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம்
சருமத்திற்கு நன்மை தரும்.
மேலும் சில செய்திகள் :
எலும்பு பிரச்சனை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு
எலும்பு தொடர்பான பிரச்சனைகளை
தடுக்க உணவில் சிறுதானியங்களை
சேர்ப்பது நல்ல தீர்வு. உதரணமாக, மூட்டு
வலி, வீக்கத்தை குறைக்க கேழ்வரகு
மற்றும் கம்பு உதவுகிறது. அழற்சியை
நீக்கி, எலும்புகளை உறுதி ஆக்குகிறது.
இவற்றை ரொட்டி, கஞ்சி, கிச்சடி,
சாலட் என எதேனும் ஒரு விதத்தில்
உண்டுவர ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கடின உழைப்பு செய்வோருக்கு ஏற்ற
உணவாகவும் உள்ளது.
மேலும் சில செய்திகள் :
வெள்ளை சோளத்தின்
பயன்கள்…
வெள்ளை சோளத்தில் இருக்கும்
அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை
சுத்தப்படுத்தி, இதயத்திற்கு
ஆரோக்கியத்தை தருகிறது. மேலும்,
மாரடைப்பு அபாயத்திலிருந்து காக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும்
வெள்ளை சோளத்தை உணவில்
சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை
பெறலாம். இதில் நோயை எதிர்த்து
போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
உள்ளதால், வயிற்று வலி, உடல் சோர்வால்
பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த
நிவாரணியாகும்.