FlashNews: பள்ளிகள் திறப்பு – வெளியான புதிய தகவல்
FlashNews: பள்ளிகள் திறப்பு –
வெளியான புதிய தகவல்
தமிழகத்தில் எப்போது பள்ளிகளை
திறக்கலாம் என்பது குறித்து 2-வது
நாளாக மாணவர்களின் பெற்றோரிடம்
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு
வருகிறது. கடைசி நாளாக இன்று
கருத்துக்கேட்கப்பட்டு வரும்
நிலையில், பள்ளிகளுக்கு வர முடியாத
மாணவர்களின் பெற்றோரிடம் வாட்ஸ்அப்
மூலம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

மேலும், நேற்று நடந்த கருத்துக்கேட்பு
கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் பலர்
பள்ளிகளை திறக்க வலியுறுத்தியுள்ளதாக
கூறப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
Breaking: பொங்கல் போனஸ்
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.
1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும்
என இந்து சமய அறநிலையத்துறை
அறிவித்துள்ளது. அதன்படி, 2019-20-ல்
240 நாட்கள் பணியாற்றிய, முழுநேரம்,
பகுதி நேரம், தொகுப்பூதியம்,
தினக்கூலி பணியாளர்கள், முதுநிலை,
முதுநிலையல்லாத அனைவருக்கும் ரூ.
1,000 போனஸ் வழங்கப்படும்.
240
நாட்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு
பணிபுரிந்த நாட்களுக்கு விகிதாச்சார
அடிப்படையில் போனஸ் வழங்கப்படும்
என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
அந்தமானில் நிலநடுக்கம் –
ரிக்டரில் 4.4 ஆக பதிவு
அந்தமான் – நிக்கோபார் தீவு பகுதியில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை
6.50 மணியளவில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக
பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காம்ப்பெல் பேவுக்குத்
தென்கிழக்கில் 2 கிமீ தொலைவில்
பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.