முக்கிய பிரபலம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
முக்கிய பிரபலம் மாரடைப்பால்
மருத்துவமனையில் அனுமதி
அரியலூர் அதிமுக எம்எல்ஏவும், அரசு
தலைமை கொறடாவுமான ராஜேந்திரனுக்கு
திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து,
திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து
அவருக்கு அடைப்பை சீரமைக்கும்
சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்,
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து
மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை
பெற்று வருகிறார்.
மேலும் சில செய்திகள் :
கடன் வாங்கப்போகிறீர்களா? –
அதிர்ச்சி அறிவிப்பு….
கடன் வாங்குவதற்கு ஆன்லைன்
கடன் செயலிகளை பயன்படுத்த
வேண்டாம் என சென்னை மாநகர காவல்
ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
கடன் செயலிகளில் பல
அங்கீகரிக்கப்படாதவை என்றும், கடன்
செயலிகள் கடன் வாங்கி தொகையை
செலுத்த தாமதிப்பவர்களின் விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வன்முறையை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சில செய்திகள் :
ஒன்றல்ல… நான்காக உருமாறிய
கொரோனா வைரஸ்
சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறிந்த
நாள் முதல் இதுவரை உலகம் முழுவதும்
4 வகையாக, கொரோனா வைரஸ்
உருமாறியுள்ளதாக உலக சுகாதார
அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்திலும்
சில மாற்றங்களே இருப்பதால் பெரிய
அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும்,
உருமாறிய வைரஸுக்கு தடுப்பூசிகள்
பயனளிக்கும் என்பதை குறித்து இதுவரை
ஆய்வு முடிவுகள் இல்லை என்றும் WHO
தெரிவித்துள்ளது.