மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பரபரப்பு என்ன செய்ய போகிறார் மம்தா? யார் இந்த சோவன் சட்டார்ஜி?
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பரபரப்பு என்ன செய்ய போகிறார் மம்தா? யார் இந்த சோவன் சட்டார்ஜி?
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார், மம்தா பானர்ஜி கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்த முன்னணி தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் மம்தாவின் வலது கரம் சோவன் சட்டார்ஜி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

சோவன் சாட்டர்ஜி தன்னுடைய 21 வயதில்.அதாவது 1985 ல் கொல்கத்தா கார்பரேசனில் காங்கிரஸ் சார்பாக கவுன்சிலராக வெற்றி பெற்றவர். பிறகு 1998ல் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசை ஆரம்பித்தவுடன் மம்தா உடன் இணைந்து கொண்டார்.
மம்தாவின் வலது கையாக இருந்தவர் 10 வருடம் கொல்கத்தா மேயராக இருந்து
அடுத்து மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். மேற்கு வங்காளத்தில் ஆட்சியை இழக்கும் வரை பேயாட்டம் ஆடிய இடதுசாரிகள் சோவன் சாட்டர்ஜியை கண்டாலே தெறித்து ஓடுவார்கள். கொல்கத்தாவில் இவர் கால் படாத இடமே கிடையாது என்று கூறலாம். ஒரு மேயருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்து இருந்தார்கள்
என்றால் அது சோவன் சாட்டர்ஜிக்குதான் .
மம்தா பானர்ஜி கையை பிடித்து இப்படி
போஸ் கொடுக்கும் பொழுதே சோவன்
சாட்டர்ஜியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். இவர் கடந்த வருடம் பிஜேபி பக்கம் வந்துவிட்டார்
சோவன் சாட்டர்ஜி பிஜேபிக்கு போய் விட்டார் என்பதை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் நம்பவே முடியவில்லை என்றால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்து இருப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இனியும் கொல்கத்தா கார்பரேசன் தேர்தலை எதிர்பார்த்து சும்மா உட்கார வைக்க கூடாது என்று கொல்கத்தா ரீஜனில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை கண்காணித்து வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பை அளித்து இருக்கிறது பிஜேபி தலைமை. சோவன் சட்டார்ஜி பாஜகவில் இணைய காரணமாக கூறப்பட்டது முழுக்க முழுக்க வங்க மக்களை பராமரிப்பதற்கு பதில் முழுமையாக வங்க தேசத்தினரை பாதுகாக்கும் முதல்வராக மம்தா மாறிவிட்டார் என்பதே மிக பெரிய குற்றசட்டாக வைக்கப்பட்டது.
தொடர்ந்து பலர் மம்தா கட்சியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி என்ன செய்ய போகிறார் எவ்வாறு பாஜகவை வீழ்த்த போகிறார் என பல கேள்விகள் இப்போதே அம்மாநில வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகிறது.