அது விருது இல்லை கையை எடுங்கள் 17 வருடத்திற்கு பிறகு ட்ரோல் ஆகும் ஸ்டாலின் வீடியோ!!
அது விருது இல்லை கையை எடுங்கள் 17 வருடத்திற்கு பிறகு ட்ரோல் ஆகும் ஸ்டாலின் வீடியோ!!
திமுக தலைவர் ஸ்டாலின் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் விருது வாங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த தனியார் தொலை தூர பல்கலைக்கழகம் 2003 ம் ஆண்டில் உள்ளாட்சியில் சிறப்பாக பணியாற்றிய முக ஸ்டாலினுக்கு விருது வழங்கியதாக திமுகவினர் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர்.
அதை ஸ்டாலின் தனது அதிகார பூர்வ யூடுப் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார், ஆனால் அந்த பல்கலைக்கழகம் சார்பில் விருது வழங்கும் முன்பு விருது பெருபவர்களை வாழ்த்துவது வழக்கம் கிறிஸ்தவ பாதிரியார்கள் வைத்திருக்கும் கைத்தடி போன்று ஒன்றை கொண்டு விருது பெருப்பவரின் தோளில் வைத்து அவரை பாராட்டுவார்கள்.

ஆனால் ஸ்டாலின் அந்த கைத்தடி தமிழகத்தில் தேர்தல் மேடைகளில் கொடுக்கப்படும் வீர வாழ் என நினைத்து அதை கையில் பிடித்துவிட்டார் பின்பு பின்னால் இருப்பவர் அது விருது இல்லை என சொன்னதும் சட்டென கையை எடுத்துவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் ட்ரோல் செய்யும் பக்கங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது.
ட்ரோல் வீடியோவிற்கு கீழே ஒருவர் அது விருது இல்லை ஸ்டாலின் கையை எடுங்கள் என கிண்டல் அடித்து பதிவு செய்துள்ள கமெண்ட் 300 பேர் அளவிற்கு சிரித்து வைத்து இருக்கிறார்கள்
ஒரு வாழ்த்து கூற திமுகவினர் பகிர்ந்த வீடியோக்கள் இப்போது அவர்கள் தலைவரையே ட்ரோல் செய்ய அதிக அளவில் பயன்பட ஆரம்பித்துள்ளன.