கத்தரிக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?

கத்தரிக்காய் பஜ்ஜி செய்வது
எப்படி?

கடலைமாவு-1கப், அரிசிமாவு1/4கப்,
பெருங்காயதூள்(தே.அ), இஞ்சிபூண்டு
பேஸ்ட், மிளகாய்த்தூள், பேக்கிங்
சோடா, உப்பு (தே.அ). மேற்கூறிய
பொருட்களை நீர் ஊற்றி பஜ்ஜி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய கத்தரிக்காயை மாவில் நனைத்து
வாணலியில் இட்டு பதமாக எடுத்தால்
சுவையான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.

இதய நோயிலிருந்து காக்க….

மாமிச உணவுகளை குறைத்து தாவர
உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு
இருதய நோய்கள் ஏற்படுவதற்கான
அபாயம் குறைவாக உள்ளதாக
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர்
ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலில்
ஜீரண சக்திக்கு உதவும் பாக்டீரியாக்களின்
செயல் திறனை தாவர உணவுகள்
மேம்படுத்துகிறது. இதனால் உடலில்
கொழுப்பு சேர்வது குறையும் என்று
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட
பக்தர்களுக்கும் அனுமதி

நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா
தரிசன உற்சவம் நடைபெற உள்ளது.
அங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா
சான்று கட்டாயம் இல்லை எனவும்
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
என்ற அடிப்படையில் 200 பக்தர்களுக்கு
அனுமதி வழங்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து
மாவட்ட பக்தர்களும் பங்கேற்கலாம்
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami