மக்கள் நீதி மையத்தின் முக்கிய தூண் பாஜகவில் இணைகிறார் அனைத்து ரகசியமும் உடைந்ததால் கமல் அதிர்ச்சி!!
மக்கள் நீதி மையத்தின் முக்கிய தூண் பாஜகவில் இணைகிறார் அனைத்து ரகசியமும் உடைந்ததால் கமல் அதிர்ச்சி!!
தமிழக பாஜக தலைவர் முருகன் மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நபர் நாளை பாஜகவில் இணைவதாக நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார், இந்த நிலையில் அந்த நபர் யாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் மக்களவை தேர்தலை ஏற்கனவே சந்தித்த கமல்ஹாசன் தற்போது தனது நண்பர் ரஜினியையும் எதிர்கொண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

தொடர்ந்து மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் சமீப காலமாக எம்ஜிஆரை தனது அரசியல் பயணத்திற்கு துணைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கமல்ஹாசன் கட்சியிலிருந்து மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் பாஜகவிற்கு இன்று இணைய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம்.
நடிகர் கமலின் அரசியல் பயணம் திட்டங்கள் என அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர் அருணாச்சலம் என்பதும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு வியூகம் வகுக்கும் குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம் என்பதும் தெரியவந்துள்ளது. கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் பாஜகவிற்கு செல்லவிருப்பது மக்கள் நீதி மையம் தலைவர் கமலுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.