புதிய கொரோனா வைரஸ்முதல்வர் ஆலோசனை – ஜனவரி மாதம் ஊரடங்கு?
புதிய கொரோனா வைரஸ்முதல்வர் ஆலோசனை – ஜனவரி
மாதம் ஊரடங்கு?
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க
கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல்
தடுப்பது குறித்து வரும் 28ஆம்
தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ
நிபுணர்களுடன் ஆலோசனை
நடத்துகிறார்.

ஆலோசனைக்குப் பின்னர்
புதிய தளர்வுகள் அல்லது ஜனவரி
மாதம் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
அமல்படுத்தலாம் என்று தகவல்
தெரிவிக்கின்றன.
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
தொடக்கம்
வாரத்தின் 3வது நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
தற்போதைய
நிலவரப்படி சென்செக்ஸ் 118.89
புள்ளிகள் அதிகரித்து 46,125.58
புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
குறியீட்டு எண் நிஃப்டி 28.80 புள்ளிகள்
உயர்ந்து 13,495.10 புள்ளிகளாகவும்
வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
முதல்வர்- துணை முதல்வர்
வாழ்த்து தெரிவிப்பு
தேசிய விவசாயிகள் தினத்தை
முன்னிட்டு “உலகத்திற்கே படியளக்கும்
உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி
அடைகிறேன்” என முதல்வர் எடப்பாடி
பழனிசாமி அவர்களும் “விவசாயிகளின்
நலன் பேணவும், அவர்களின் உயர்விற்கு
வழிகாணவும் தமிழ்நாடு அரசு
உறுதுணையாக இருக்கும்” என துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.