திருப்பதியில் 3 நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து!
திருப்பதியில் 3 நாட்களுக்கு
அனைத்து சேவைகளும் ரத்து!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
நாளை முதல் 3 நாட்களுக்கு அனைத்து
சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில்
விஐபி தரிசன டோக்கன்கள் வாங்க
நேரில் வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு
அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.
(ஜ)சல்லிக்கட்டு நடத்த அனுமதி
-தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 2021இல் கட்டுப்பாடுகளுடன்
(ஜ)சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு
நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி
அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
300 மாடுபிடி வீரர்கள், 50% வரை
பார்வையாளர்களுடன் (ஜ)சல்லிக்கட்டு
உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம்
என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட மையத்தில்
”கொரோனா இல்லை” என சான்று
பெற்றிருக்க வேண்டும் எனவும்
உத்தரவிட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ்முதல்வர் ஆலோசனை – ஜனவரி
மாதம் ஊரடங்கு?
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க
கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல்
தடுப்பது குறித்து வரும் 28ஆம்
தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ
நிபுணர்களுடன் ஆலோசனை
நடத்துகிறார்.
ஆலோசனைக்குப் பின்னர்
புதிய தளர்வுகள் அல்லது ஜனவரி
மாதம் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
அமல்படுத்தலாம் என்று தகவல்
தெரிவிக்கின்றன.