இளைஞர்களே என்ஜாய் பண்ணுங்க… புத்தாண்டு கொண்டாட அனுமதி
இளைஞர்களே என்ஜாய் பண்ணுங்க… புத்தாண்டு கொண்டாட அனுமதி
புத்தாண்டு கொண்டாட அனுமதி
தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு
கொண்டாட தடை விதிக்கப்பட்ட
நிலையில், புதுச்சேரியில் அனைத்து
கடற்கரைகளிலும் புத்தாண்டை
கொண்டாட அனுமதி அளித்து முதல்வர்
நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக
இடைவெளியை கடைபிடித்து புத்தாண்டை
கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு
கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே
அனுமதி. மேலும், கிறிஸ்துமஸ்
பண்டிகையை இரவில் கொண்டாட
தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்களை
நிர்வகிக்க அறக்கட்டளை
அம்மா உணவகங்களை நிர்வகிக்க
அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதார இணை
ஆணையர் தலைமையில் 700க்கும்
மேற்பட்ட அம்மா உணவகங்களை
நிர்வகிக்க தனி அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பை கரைக்கும்
லெமன்கிராஸ் டீ….
எலுமிச்சை போன்ற மணத்தை
கொண்டிருந்தாலும், லெமன்கிராஸ்
இனிப்பு தன்மையுடையது.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ
முறைகளில் லெமன்கிராஸ் அதிகளவில்
பயன்படுத்தப்படுகிறது.
உடல் சோர்வை
போக்க லெமன்கிராஸ் டீயை தினந்தோறும்
பருகலாம். உடலிலுள்ள நச்சுகளை
வெளியேற்றுவதில் லெமன்கிராஸ்
முக்கியப் பங்கு வகிக்கிறது. சீரான
அளவில் தினமும் லெமன்கிராஸ் டீயை
அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற
கொழுப்புகள் குறையும்.