பற்களில் மஞ்சள் கறை நீங்க…
பற்களில் மஞ்சள் கறை நீங்க…
பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய்
எண்ணெய் -1 ஸ்பூன், ஆப்பிள் சீடர்
வினிகர் – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு
1 ஸ்பூன், டூத் பேஸ்ட் – 1 ஸ்பூன்
ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு
பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.

அலுமியத்தாள் ஒன்றை விரித்து அவற்றில்
பரப்பியவாறு வைக்கவும். அதை
பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால்
தேய்த்துவிட்டு வெந்நீரில் கொப்பளித்தால்
கறை குறைந்திருக்கும்.
வீடுகள் எப்பொழுதும் குளுமையாக வைத்துக்கொள்ள….
பெரும்பாலானவர்கள் வீடுகளில் ஒரு
அறையில் மட்டும் தான் ஏசி இருக்கும்,
ஆகையால் குடும்பத்தினர் அனைவரும்
ஒரே அறையில் தங்குவது நெருக்கடியை
ஏற்படுத்தும்.
இதை தவிர்த்து வீடு முழுதும்
குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது,
மாடித்தோட்டம் அமைப்பது, வீட்டிற்கு
இளநிற பெயிண்ட் அடிப்பது என வீடு
மொத்தம் குளுமையாக வைக்க உதவும்.
இதன் மூலம் கரண்ட் பில்லில் இருந்தும்
தப்பிக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க பேரீச்சையை இப்படி சாப்பிடுங்கள்…
பேரீச்சையில் இயல்பாகவே
அதிகமிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து,
இயற்கையான மலமிளக்கியாக
செயல்படுகிறது. இதிலுள்ள
(பீட்டா-D-க்ளூக்கன்) நார்ச்சத்து நீருடன்
எளிதாக கலந்து சக்கையை அதிகரித்து,
குடல் இயக்கத்தை எளிதாக்கி,
மலச்சிக்கலை தடுக்கிறது.
நல்ல பலன்
கொடுக்க, கொட்டை நீக்கப்பட்ட
பேரீச்சையை இரவு முழுவதும் நீரில் ஊற
வைத்து, காலையில் அந்த நீருடன் சேர்த்து
பழத்தையும் உட்கொள்ளவும்.