தங்கம், வெள்ளி விலை குறைவு
தங்கம், வெள்ளி விலை குறைவு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.
37,800-க்கும், கிராமுக்கு ரூ.44
குறைந்து ரூ.4,725-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,872-க்கும், கிராம் ரூ.
5,109-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.1.70 காசு குறைந்து
கிராம் ரூ.72.00-க்கும், கிலோ வெள்ளி ரூ.
72,000-க்கும் விற்கப்படுகிறது.
இளைஞர்களே என்ஜாய் பண்ணுங்க… புத்தாண்டு கொண்டாட அனுமதி
புத்தாண்டு கொண்டாட அனுமதி
தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு
கொண்டாட தடை விதிக்கப்பட்ட
நிலையில், புதுச்சேரியில் அனைத்து
கடற்கரைகளிலும் புத்தாண்டை
கொண்டாட அனுமதி அளித்து முதல்வர்
நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக
இடைவெளியை கடைபிடித்து புத்தாண்டை
கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு
கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே
அனுமதி. மேலும், கிறிஸ்துமஸ்
பண்டிகையை இரவில் கொண்டாட
தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்களை
நிர்வகிக்க அறக்கட்டளை
அம்மா உணவகங்களை நிர்வகிக்க
அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதார இணை
ஆணையர் தலைமையில் 700க்கும்
மேற்பட்ட அம்மா உணவகங்களை
நிர்வகிக்க தனி அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.