Breaking: இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தவருக்கு புதிய வைரஸ் கொரோனா-அதிர்ச்சி
Breaking: இங்கிலாந்தில் இருந்து
சென்னை வந்தவருக்கு புதிய
வைரஸ் கொரோனா-அதிர்ச்சி
இங்கிலாந்தில் மாற்றமடைந்த புதிய
வகை கொரோனா வைரஸ் பரவல்
காரணமாக அங்கு மீண்டும் ஊரடங்கு
அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,
இங்கிலாந்தில் இருந்து சென்னை
வந்தவருக்கு புதிய வைரஸ் கொரோனா
உறுதி செய்யப்பட்டுள்ளது பீதியை
கிளப்பியுள்ளது.

இதனையடுத்து, கடந்த
10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து
வந்தவர்களை கண்டறிந்து பரிசோனை
செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பங்குச்சந்தைகள் சரிவு
வாரத்தின் 2வது நாளான இன்று
பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை
தொடங்கியுள்ளது. செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ்
33.61 (-0.07%) புள்ளிகள் சரிந்து
45,520.35 புள்ளிகளாகவும், தேசிய
பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி
102.00 (-0.77%) புள்ளிகள் குறைந்து
13,226.40 புள்ளிகளாகவும் வர்த்தகம்
நடைபெற்று வருகிறது.
இவர்களுக்கு எல்லாம் பொங்கல்
பரிசு தொகை ரூ.2500 கிடையாது
பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500,
விலையில்லா வேட்டி சேலை மற்றும்
ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு,
ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி
வழங்கும் திட்டத்தை முதல்வர் EPS
நேற்று தொடங்கி வைத்தார்.
சர்க்கரை
குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள்
தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப
அட்டைகளாக மாற்ற வேண்டும் என்ற
காலக்கெடு 20ம் தேதியுடன் முடிந்து
விட்டது. பலர் இந்த காலக்கெடுவுக்குள்
அரிசி குடும்ப அட்டையாக மாற்றவில்லை.
இதனால், அவர்களுக்கு ரூ.2500
வழங்கப்படமாட்டாது என்று தகவல்
வெளியாகியுள்ளது.