ராக்கி பாய் இஸ் பேக் – கேஜிஎஃப் 2 டீசர் தேதி அறிவிப்பு
ராக்கி பாய் இஸ் பேக் –
கேஜிஎஃப் 2 டீசர் தேதி
அறிவிப்பு
2018-ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில்
யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப்
திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்,
கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பு
முழுவதும் முடிவடைந்த நிலையில்,
படத்தின் டீசர் ஜனவரி 8-ந் தேதி காலை
10.18 மணிக்கு வெளியாக உள்ளதாக
படக்குழு அறிவித்துள்ளது.
EPS மற்றும் OPS செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சில முக்கிய முடிவுகள்
BREAKING: ஜன.9இல் அதிமுக
செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
சென்னை வானகரம் ஸ்ரீவாரு
வெங்கடாசலபதி மண்டபத்தில் ஜனவரி
9ஆம் தேதி காலை 8.50 மணிக்கு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு
கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,
துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்
அறிவித்துள்ளனர்.
செயற்குழு மற்றும்
பொதுக்குழு கூட்டத்தில், யார் யாருடன்
கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு,
தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல
முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking:திடீர் திருப்பம்- ரஜினி
கட்சி தொடங்கும் தேதி மாற்றம்!
டிசம்பர் 31 இல் கட்சி குறித்த
அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர்
ரஜினி அறிவித்திருந்த நிலையில், திடீர்
திருப்பமாக எம்ஜிஆர் பிறந்தநாளான
ஜனவரி 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக
கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர்
ஆட்சியை கொடுப்பேன் என்ற ரஜினி,
எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்க
ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே,
நான் தான் எம்ஜிஆர் வாரிசு என்று கமல்
சூளுரைத்து வரும் நிலையில், தற்போது
ரஜினியும் அதே பாணியை கையில்
எடுத்துள்ளார்.