தமிழகத்தில் அனைத்து இல்லத்தரசிகளுக்கு ஊதியம் – அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் –
அதிரடி அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் சட்டமன்றத்தில்
வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு
ஊதியம் வழங்கப்படும் என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்களை வறுமை கோட்டிற்கு மேல்
அல்லாமல் செலுமை கோட்டிற்கு மேல்
வைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம்
ஒழிய வேண்டும். இணைய பாதுகாப்பில்
மநீம உறுதியாக இருக்கிறது. வரும்
முன் கணிப்பு என்ற முறையில் அரசை
செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.
வானில் அதிசயம் நிகழ்கிறது
சூரியனை சுற்றி வரும்போது,
ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன்
சில நேரங்களில் நேர் கோட்டில்
வருவது உண்டு. அந்த வகையில், 800
ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும்
சனி கோள்கள் மிக நெருக்கமாக பூமிக்கு
அருகில் வர உள்ளன.
வியாழன் – சனி
ஆகிய இரு கோள்களும் நெருங்கி ஒரே
கோளாக இன்று மாலை 6.30 மணிக்கு
காட்சியளிக்கும் இந்த அரிய நிகழ்வை
வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இரண்டு மணிநேரம் உங்களுக்கென கட்டாயம் வேணும்.
உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க
ஒருவர் வாரத்துக்கு குறைந்தது 150
நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய
வேண்டியது அவசியம் என்று உலக
சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 5-17
வயதுக்காரர்கள் தினசரி 60 நிமிடங்களும்,
உடற்பயிற்சி செய்யவேண்டும்.
18-64
வயதுக்காரர்கள் வாரத்துக்கு 150
நிமிடங்கள் உடலுழைப்பு அல்லது 75
நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட
வேண்டும்.