இன்று முதல் என்ஜாய் பண்ணுங்க மக்களே…
இன்று முதல் என்ஜாய்
பண்ணுங்க மக்களே…
குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணியருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 2
நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டு
இருந்த நிலையில், நீர்வரத்து
குறைந்துள்ளதால் குளிக்க அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா
பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கற்பூரத்திற்கு இப்படியும் பயன்!
பூஜைக்கு பயன்படும் கற்பூரத்தை உடலில்
ஏதேனும் நமைச்சல், எரியும் உணர்வு
இருந்தால் அந்த இடத்தில் தேய்த்தால்
ஜில்லென இருக்கும்; எரிச்சல் நீங்கும்.
ஆணி, நகசுத்தி இருந்தால் கற்பூரத்தை
பேஸ்ட் போல் தேங்காய் எண்ணெய்யில்
குழைத்து தடவினால் குணமாகும்.
ஆனால்
கற்பூரம் பலருக்கு ஏற்றுக்கொள்ளாது.
எனவே பயன்படுத்தும் முன் மணிக்கட்டு
பகுதியில் தேய்த்து சோதித்து பின்
பயன்படுத்தவும்.
இந்த தவறை மட்டும்
பண்ணிடாதீங்க… எச்சரிக்கை!
வீட்டுக்குள்ளேயே இருப்பதும் சூரிய
வெளிச்சம் படாமல் இருப்பதும் தான்
தற்காலத்தில் கிட்டப் பார்வை பிரச்சனை
(குறிப்பாக குழந்தைகள் இடையே)
அதிகரித்துள்ளதற்கு காரணம் என்கின்றனர்
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
குழந்தைகள் ஒரு நாளைக்கு
குறைந்தது ஒரு மணி நேரமாவது
வெளிப்புற பகல் வெளிச்சத்தில் இருக்க
வேண்டும். இல்லையெனில் அது
அவர்களின் பார்வையை பாதிக்குமாம்.
வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை
அடைத்து வைக்கும் பெற்றோர் இதைக்
கவனிக்க வேண்டும். ஒரு மணிநேரமாவது
குழந்தைகளை வெளியில் விளையாட
விடுங்கள்.