தேரை இழுத்து தெருவில் விட்ட சற்குணம் சிக்கலில் கனிமொழி இப்போது வருந்தி என்ன பயன்?

தேரை இழுத்து தெருவில் விட்ட சற்குணம் சிக்கலில் கனிமொழி இப்போது வருந்தி என்ன பயன்?

வேளாண் மசோதாவினை எதிர்த்து டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக, திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய உண்ணா விரத போராட்டத்தில் , பிரதமர் மோடியை மிகவும், தரக்குறைவாக விமர்சனம் செய்த கிறிஸ்தவ மதபோதகர், எஸ்.ரா.சற்குணத்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

பிரதமரின் தனிப்பட்ட வாழ்கை குறித்து விமர்சனம் செய்த பொழுது அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த ஸ்டாலின் ஒரு வார்த்தை சற்குணத்தை தடுக்கவில்லை, பிரதமரின் திருமண வாழ்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் மிகவும் அருவருக்க தக்க வகையில் பேசிய சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
ஸ்டாலின் முன்னிலையில் மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்கள் பற்றி இழிவாக பேசியுள்ள அயோக்கியன் எஸ்.ரா சற்குணம் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

பாஜக துணை தலைவர் அண்ணாமலை பிரதமர் குறித்து தவறாக பேசிய சற்குணத்தை கண்டித்ததுடன் இனியும் தமிழகம் தாங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார், இது ஒருபுறம் இருக்க தேசிய அளவில் திமுக மீது பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர், நாகரிகம் என்ற ஒன்று நிச்சயம் திமுகவினருக்கு தெரியவில்லை கருணாநிதி உடல்நிலை குன்றிய போது நேரில் சென்று நலம் விசாரித்தவர் பிரதமர் மோடி, அவரது இறப்பின் போது நேரடியாக சென்று ஸ்டாலினை சந்தித்து அனுதாபம் தெரிவித்துவந்தார்.

ஏன் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் நீங்கள் சொன்னால் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கேட்டு கொள்வார்கள் என போனில் பிரதமரிடம் கெஞ்சியவர் ஸ்டாலின் அப்போதுகூட பிரதமர் கரிசனம் காட்டினார் ஆனால் பச்சை துரோகியாக திமுக இருக்கிறது, இதற்கு முன்னர் ஈரோட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய மாநாட்டில் பிரதமரை ஒருமையில் பேசினார் ஸ்டாலின், கருப்பு பலூன் என இராணுவ தடவாள உற்பத்தி நிலையம் திறந்துவைக்க வரும்போது அவமானப்படுத்தினார்.

இதெல்லாம் பிரதமர்மோடியின் மனதில் வடுவாக இருக்கிறது, நேற்று பிரதமர் மோடி குறித்து பாதிரியார் சற்குணத்தை அழைத்து வந்து திட்டமிட்டு பேச வைத்துள்ளார், இது ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்தது இல்லை, கிறிஸ்துமஸ் வரவுள்ள நிலையில் சற்குணத்தை பிரதமரை வன்மமான முறையில் பேசவைத்து அதன் மூலம் பாஜக vs கிறிஸ்துவர்கள் என்ற விவாதத்தை ஸ்டாலின் முன் நிறுத்தி வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார்.

முஸ்லிம்கள் ஓட்டினை ஸ்டாலின் முழுமையாக நம்பவில்லை காரணம் பீகாரில் முத்தலாக் முறையை தடை செய்த காரணத்தால் பல பெண்கள் பாஜகவிற்கு வாக்கு அளித்துள்ளனர், அதோடு தீவிர முஸ்லீம் கொள்கை பிடிப்பு கொண்ட நபர்கள் ஒவைசிக்கு ஆதரவாக வாக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதால் இப்போது கிறிஸ்தவர்கள் வாக்கினை அறுவடை செய்ய பிரதமர் என்றும் பாராமல் ஒருவரை தர குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.

இதில் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ வாக்குகளை அறுவடை செய்வது மட்டும் இலக்கு இல்லை மாறாக தனது மகனிற்கு போட்டியாக வளரும் கனிமொழியை சிறைக்கு அனுப்புவது என்பதே அவரது நோக்கம் 2ஜி வழக்கு தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் பாஜக மீது மோதல் போக்கை தீவிரமாக ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் அதன் வெளிப்பாடுதான் ஸ்டாலின் சற்குணத்திற்கு மேடை போட்டு பிரதமரை அவதூறாக பேசியது என்கின்றார் டெல்லி பத்திரிகையாளர் வைகை ரா. அரவிந்தன்.

பிரதமரை அவதூறாக பேச மேடை அமைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கனிமொழியை சிறைக்கு அனுப்ப திட்டமிட்ட ஸ்டாலினுக்கு எதிராக அடுத்து கனிமொழி தரப்பு என்ன எதிர்வினை ஆற்ற இருக்கிறது என்பது இனிதான் தெரியவரும், பிரதமர் வாழ்கை குறித்து தொடர்ந்து வன்மமாக பேசும் சற்குணம் எவ்வாறு கைது செய்யப்படாமல் சுதந்திரமாக தமிழகத்தில் நடமாட முடிகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami