முதல்வர் ஈபிஎஸ் அந்தர் பல்டி
முதல்வர் ஈபிஎஸ் அந்தர் பல்டி
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம்
கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள்
இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக
தமிழக அரசு கொஞ்சம் நேரத்திற்கு
உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஆனால், தமிழக முதல்வர் ஈபிஎஸ்
சற்றுமுன் அளித்த பேட்டியில்
எய்ம்ஸ் அமைக்க முழு நிலமும்
கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு
இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை
என்று அந்தர்பல்டி பதிலை
தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த
பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக 120 பார்க்கிங் இடங்கள்
120 புதிய பார்க்கிங் இடங்கள்
சென்னையில் புதிதாக 120 இடங்களில்
வாகன நிறுத்துமிடங்களை அமைக்க
மாநகராட்சி நடவடிக்கை எடுத்து
வருகின்றன. சுமார் 55 லட்சம்
வாகனங்கள் உள்ள நிலையில், முக்கிய
வணிக பகுதிகள், வழிபாட்டு தலங்கள்,
பொழுதுபோக்கு தலங்கள் உள்ளிட
நகரின் முக்கிய பகுதிகளில் இந்த ஏற்பாடு
செய்யப்படவுள்ளது. இவற்றை மக்கள்
தெரிந்துகொள்ள செயலியும் அறிமுக
செய்யப்படவுள்ளது.
BREAKING: புதிதாக அரசு
வேலை – தமிழக அரசு அதிரடி
அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் நிர்வாகம், அலுவல்
தொடர்பான பணிகளுக்காக புதிதாக 484
இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
389 இளநிலை உதவியாளர், 95
பதிவறை எழுத்தர் பணியிடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.
TNPSC
மூலம் விரைவில் பணி நியமனங்கள்
நடைபெறும். கற்றல், கற்பித்தல்
பணிகள் தொய்வின்றி நடக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.