கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தை முதல் முறையாக கைப்பற்றுமா பாஜக வெளியானது முதற்கட்ட தேர்தல் முடிவுகள்?
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தை முதல் முறையாக கைப்பற்றுமா பாஜக வெளியானது முதற்கட்ட தேர்தல் முடிவுகள்?
திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது .கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆலப்புழை, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக கோட்டயம், எர்ணாகுளம் திருச்சூர் , பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் 10-ம் தேதியும், மூன்றாவது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 14-ம் தேதியும் நடை பெற்றதுஇதில் மொத்தம் 76.63 சதவீத பேர் வாக்களித்துள்ளனர்.

டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதம் பேர் வாக்களித்தனர். டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 78.62 சதவீதம் பேர் வாக்களித்தனர்.இந்த தேர்தலில் அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.98 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பு படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள, வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி தொடங்கியது
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், தேர்தல் முடிவுகள் வௌியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், மதியம் 1 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என நம்புவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது கடந்த ஆண்டு திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது 33 வார்டுகளை 2015 ல் பாஜக வெற்றி பெற்றது.
எனவே இந்த முறை திருவனந்தபுரத்தை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது? தற்போதைய (8.45am ) முதற்கட்ட முடிவுகள் அடிப்படையில் கம்யூனிஸ்ட்கள் 9, காங்கிரஸ் -2,பாஜக -7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கேரள மாநிலத்தில் மொத்த 6 மாநகராட்சியில் கம்யூனிஸ்ட் 5 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது ஆச்சர்யமாக திருச்சூர் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.